தி.மு.க.வின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய கம்யூனிஸ்ட் கட்சி.

இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ், பிரச்னைக்குரிய விடுதலை சிறுத்தைகளை எல்லாம் தி.மு.க. சிறப்பாகவே கையாண்டது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விவகாரத்தில்தான் படு டென்ஷனுக்கு ஆளானதாகத் தெரிவிக்கிறார்கள்.


திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர மற்ற எல்லா பெரிய கட்சிகளுக்கும் தலா 6 இடங்கள் மட்டுமே தரப்பட்டிருக்கின்றன. இது கட்சி அங்கீகாரத்திற்கு உதவாது என்பதால் மதிமுக, விசிக கட்சியினர் கொதித்துப்போய் உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் 6க்கு ஒத்துக்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்டும் கடைசிவரை முரண்டு பிடித்தது. 

‘‘இந்திய கம்யூனிஸ்ட் ஒண்ணு ரெண்டு மாவட்டங்களில் மட்டும்தான் இருக்குது. ஆனா நாங்க தமிழ்நாடு முழுவதும் இருக்கிறோம். அத்துடன் தொழிற்சங்கங்கள் வேறு இருக்கின்றன. எனவே அவர்களை விட ஒரு சீட்டாவது கூடுதலாக தர வேண்டும்’’ என மல்லுகட்டினார்கள்.

 விஷயமறிந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தோழர் ஒருவர், ‘’ எல்லாமே கழுதை விட்டைதான். இதில முன் விட்டை வேறு, பின் விட்டை வேறா?’’ என கமெண்ட் அடித்தாராம்.

எப்படியோ சமாளித்துவிட்டாலும், இதற்கு தகுந்த ஒத்துழைப்பு கிடைக்குமா என்பதுதான் இப்போது தி.மு.க.வின் கவலையாக இருக்கிறது.