நித்தியானந்தா ஆசிரமத்தில் சின்மயி! வெளியான புகைப்படத்தின் உண்மை பின்னணி!

நித்யானந்தாவுடன் தாமிருந்த புகைப்படம் போலி என்று பிரபல பாடகி சின்மயி கூறியிருப்பது வைரலாகியுள்ளது.


பாடகி சின்மயி "மீ டு" புகார்களின் மூலம் பிரபலமடைந்தவர். அதைத்தொடர்ந்து இவர் சமூகத்தில் பெண்களுக்கெதிரான பல செயல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். ஆனால் நெட்டிசன்கள் எப்போதும் இவருக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இவர் எது பற்றி பேசினாலும், அர்த்தத்தை திரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

சமீபத்தில் சின்மயி சுவாமி நித்தியானந்தாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த புகைப்படம் வெளியான உடனே சின்மயி, அது உண்மை அல்ல என்றும், மார்ஃப் செய்யப்பட்டது என்றும் விளக்கமளித்தார். ஆனாலும் சிலர் விடாமல் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நெட்டிசன்கள் ஏன் இந்த புகைப்படத்தை திரும்ப திரும்ப பரப்பி வருகின்றனர். நான் இந்த புகைப்படம் உண்மையானது அல்ல என்பதை நிரூபித்து விட்டேன். அதன் பின்னரும் இவ்வாறு செய்வது வருத்தமளிக்கிறது. இது போன்ற செயல்களை யாராவது காசு கொடுத்து செய்கிறார்களா அல்லது காசு வாங்காமலேயே செய்கிறார்களா என்பது தெரியவில்லை" என்று பதிவு செய்திருந்தார்.

இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.