விஜயின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலில் குழப்பம் ஏற்பட்ட நிலையில் அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தளபதி 63 ரிலீஸ் டேட்! விஜய் ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சென்னை: விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யப்படுவது உறுதி என்று, படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
தெறி, மெர்சல் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் அட்லீயுடன், நடிகர் விஜய் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்திற்கு, தளபதி 63 என பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நயன்தாரா, கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர், இந்த படத்தில் நடிக்கின்றனர்.
தற்போது படப்பிடிப்புப நடைபெற்று வருகிறது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் தளபதி 63 படம், வரும் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெறுவதால், தளபதி 63 முன்கூட்டியே ரிலீஸ் செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது.
இதனை தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது. இதுபற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கூறியுள்ளார். அதில், ''முன்கூட்டியே தளபதி 63 வெளியாகும் எனக் கூறப்படும் தகவல் உண்மையானது இல்லை.
திட்டமிட்டபடி, தீபாவளி பண்டிகைக்கே இந்த படம் ரிலீஸ் செய்யப்படும்,'' என அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய்-அட்லீ வெற்றிக்கூட்டணி இணையும் 3வது படம் என்பதால், தளபதி 63 படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான சர்கார் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதே போல் அதற்கு முந்தைய ஆண்டும் தீபாவளி ரிலீஸ் மெர்சல் சக்க போடு போட்டது.
எனவே படம் என்ன தான் வேகமாக வளர்ந்தாலும் தீபாவளி ரீலிஸ் என்கிற சென்டிமென்டை மனதில் வைத்தே படத்தை அன்றைக்கு ரிலீஸ் செய்ய படத்தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால் தீபாவளி வரை தளபதி படத்திற்கு காத்திருக்க வேண்டுமா? என்று அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.