மனித நேயத்தை தீவிரவாதம் ஜெயித்துவிடக்கூடாது என்று சென்னையில் நடைபெற்ற படவிழாவில் நடிகர் சூர்யா பேசினார்.
மனித நேயத்தை தீவிரவாதம் ஜெயித்துவிடக்கூடாது! NGK விழாவில் சூர்யா உருக்கம்!
சென்னை நுங்கம்பாக்கத்தில் சூர்யா நடித்துள்ள NGK திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் பேசியதாவது: சூர்யா ஒரு அற்புதமான நடிகர். அவருடைய ரசிகராகவே இந்த படத்தை இயக்கினேன். ரொம்பவும் மெனக்கெட்டு சூர்யா சிறப்பாக நடித்துள்ளார். மே 31ம் தேதி படம் நிச்சயம் வெளியாகும்.
பின்னர் மேடையில் பேசிய சூர்யா பேசியதாவது: மனிதநேயத்தை பயங்கரவாதம் ஜெயித்துவிடக் கூடாது. இலங்கையில உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவோம். இந்த படத்தில் நடித்தது புது அனுபவமாக இருந்தது. செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என 17 வருடத்திற்கு முன் விருப்பத்தை தெரிவித்தேன். ஆனால் அது இப்போது தான் நிறைவேறியது.
செல்வராகவனிடம் தினம் தினம் கற்றுக்கொள்ள நிறைய விஷயம் இருந்தது. அடுத்த படத்தையும் செல்வராகவன் என்னை வைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு சூர்யா பேசினார்.