அசுர வேகம்! திடீரென வெடித்த டயர்! பென்ஸ் காரில் பறந்த நடிகருக்கு ஏற்பட்ட விபரீதம்!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராஜசேகரின் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.


தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் ராஜசேகர் இன்று காலை விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார். ராஜசேகர் தன்னுடைய பென்ஸ் காரில் சென்றுகொண்டிருந்தபோது செம்ஷாபாத் மண்டலம் பெத்த கோல்கொண்டா அடைந்தது.

அப்போது நடிகர் ராஜசேகர் சென்றிருந்த அந்த காரின் டயர் ஆனது திடீரென்று வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் அருகில் இருந்த தடுப்பின் மீது மோதியது. இந்த விபத்து ஏற்பட்டதும் வண்டியில் இருந்த ஆர்ப்பக் வெளி வந்த காரணத்தால் ஓட்டுநர் மற்றும் நடிகர் ராஜசேகர் குறைவான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்தை நேரில் பார்த்த அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக நடிகர் ராஜசேகர் மற்றும் அவரது ஓட்டுநரை காரில் இருந்து மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது இவர்கள் இருவருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.