செய்யக் கூடாததை செய்த காதலன்! மனம் உடைந்து டிவி நடிகை தற்கொலை!

பிரபல டிவி நடிகை தற்கொலை செய்து கொண்டது தொலைக்காட்சி தொடர் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கில் ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பவித்ரா. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நாக ஜான்சி. மேலும் சில சீரியல்களிலும் இவர் நடித்து வருகிறார்.

 

பவித்ரா சீரியல் மூலமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நாக ஜான்சிமிகவும் பிரபலம். இவரது பிரபலத்தை கண்டு தெலுங்கு படங்களில் நிறைய வாய்ப்பு வந்துள்ளது.

 

இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நாக ஜான்சி சடலமாக கிடந்துள்ளார். வெளியே சென்று திரும்பி வந்த ஜான்சியின் சகோதரர் இதனை பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

 

விரைந்து வந்த போலீசார் நாக ஜான்சி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து நாக ஜான்சி எந்த கடிதமும் எழுதி வைக்கவில்லை. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

 

நாக ஜான்சியின் செல்போனை ஆய்வு செய்த போது இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்துள்ளன. சூர்யா என்ற அந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தான் ஜான்சியின் தற்கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.

 

நீண்ட காலமாக ஜான்சியும் – சூர்யாவும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சீரியல்களில் ஜான்சி பிசியாகி உள்ளார். இதனால் சூர்யா – ஜான்சி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஜான்சியுடனான காதலை முறித்துக் கொள்வதாக சூர்யா கூறியுள்ளார்.

 

இதனால் மனம் உடைந்த ஜான்சி கடந்த சில நாட்களாக சூட்டிங்கிற்கு செல்லவில்லை. மேலும் வீட்டிலேயே இருந்து அழுது கொண்டிருந்திருக்கிறார். மன உலைச்சல் அதிகமான காரணத்தினால் ஜான்சி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

காதலித்த காதலன் பிரியும் போது அதற்கு ஏற்ற ஏற்பாடுகளை செய்துவிட்டு ஜான்சியை விட்டுச் சென்று இருந்தால் அவர் தற்கொலை செய்திருக்கமாட்டார் என்று மன நல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.