மீண்டும் ஒரு சுஜித்..! 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3வயது சிறுவன்..! உயிருடன் மீட்க நடைபெறும் போராட்டம்!

தமிழகத்தில் புதுக்கோட்டை அருகே சிறுவன் சுஜித் ஆழ்து ளை கிண்ற்றில் விழுந்து பலியான நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் 3வது சிறுவன் ஒருவன் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்டு இருக்கிறான்.


தெலுங்கானா மாநிலம் பதஞ்சேரு பகுதியை சேர்ந்த கோவர்தன் ஊரடங்கை முன்னிட்டு தனது தந்தை வீடு உள்ள மேடக் மாவட்டத்தின் போச்சன் பள்ளி சென்றுள்ளார். அங்கு விவசாய நிலத்திற்கு அருகே கோவர்தன் தனது மகனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கோவர்தனின் 3வயது மகன் அங்கே இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான்.

இதனால் பதறிப்போன அவர் மற்றும் உறவினர்கள் உடனடியாக புடவையை உள்ளே செலுத்தி குழந்தையை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் அது பலன் அளிக்காத காரணத்தினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் சிறுவன் நேற்று மாலை 5 மணி அளவில் விழுந்துள்ளான். இரவு பகலாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கிணற்றுக்குள் ட்யூப் செலுத்தப்பட்டு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.