நாம் டீனேஜ் பருவத்தில் நுழையும் போது நம் உடலில் ஏகப்பட்ட ஹார்மோன்கள் புதிதாக உருவாக்கப்படுகின்றன. அத்தகைய ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும் போது சில ஆண்களுக்கு பெண்களின் குணாதிசயங்கள் ஏற்படுகின்றன.
திருநங்கையாக மாற முடியாத ஏக்கம்! சென்னை இளைஞரின் விபரீத முடிவு!
இவ்வாறு சென்னையில் வசித்து வரும் ஒரு இளைஞன், தன்னால் திருநங்கையாக இயலவில்லை என்று தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருகம்பாக்கம் பகுதி சென்னையில் அமைந்துள்ளது. இங்கு மகேந்திரன் என்பவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரின் வயது 21. இவர் பி.சி.ஏ பட்டதாரி ஆவார்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக, ஹார்மோன்கள் சரியாக சுரக்காமல் அவதிப்பட்டு வந்தார்.இவருக்கு பெண்களுடைய குணாதிசயங்கள் ஏற்படுகின்றன. அதாவது பெண்களின் நடை, உடை பாவனை போன்றன ஏற்படத் தொடங்கின.
இதனை கவனித்து வந்த மகேந்திரனின் பெற்றோர் அவரை கண்டித்ததுடன் அறிவுரையும் வழங்கினர். மகேந்திரனிடம் திருநங்கையாக வேண்டும் என்ற ஆசையிருந்தது. அதனை அவர்கள் நிராகரித்தனர்.
இதனால் மகேந்திரன் மிகவும் மனம் வருந்தினார். 3 நாட்களுக்கு முன்பு மகேந்திரன் தன் வீட்டில் இருந்து வெளியேறினார். பின்னர் மனலியில் உள்ள 2 திருநங்கைகளுடன் தங்கிவிட்டார். மகேந்திரனின் பெற்றோர் அவரை காணவில்லை என்றவுடன் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மகேந்திரனின் நண்பர்களிடம் விசாரனை நடத்தப்பட்டது. இதனை அறிந்த கொண்ட மகேந்திரன், தன் பெற்றோர் தன்னை எப்படியும் கண்டுபிடித்து திருநங்கையாக மாற விடமாட்டார்கள் எனக்கருதி தற்கொலை செய்து கொண்டார்.
மணலி காவல்துறையினர் பின்பு சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு காரணமாக மணலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.