சும்மா இடுப்பை வளச்சி நெளிச்சி ஆடனும்...! வகுப்பறையில் ஆசிரியை போட்ட கெட்ட ஆட்டம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் பயிற்சி வகுப்பின் போது பாம்பு நடனமாடிய ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தில் ஜல்லோர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்று வந்தது. இந்த வகுப்பில் ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இடைவேளையின்போது 2 ஆசிரியர்கள் மற்றும் ஒரு ஆசிரியை பாம்பு நடனமாடி கொண்டிருந்தனர். 

இந்த சம்பவத்தை தெரியாத நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிட்டார். இந்த வீடியோவானது வாட்ஸ்அப் ஃபேஸ்புக் முதலிய அனேக சமூக வலைத்தளங்களிலும் பரவி வந்தது. இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆராய்ச்சி செய்ய மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

விசாரணையில் நடனமாடி எது உண்மை என்பது தெரிய வந்தவுடன், நடனத்தை ஒருங்கிணைத்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் கூட ஆடிய 2 ஆசிரியர்கள் புதியவர்கள் என்பதால் அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரமானது ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சில அரசு அதிகாரிகள் இதற்கு வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். "இடைவேளையின்போது ஆசிரியர்கள் நடனமாடியது தவறில்லை. நடனமாடி மகிழ்வது எந்த விதத்திலும் குற்றமில்லை. மேலும், ஆசிரியை மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்" என்றுபல தங்களுடைய கருத்தினை பதிவு செய்திருந்தனர்.

இந்த சம்பவமானது ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.