ஆசையை தீர்த்துக் கொள்ள ஆசிரியைகள் மட்டும் அல்ல மாணவிகளும்..! ஓசூர் வாத்தியாரின் பள்ளிக்கூட லீலைகள்!

சக ஆசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் பாலியல் ரீதியில் சில்மிஷங்களில் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவமானது ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அந்தேவணபள்ளி என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் வினோத்குமார் என்ற ஆசிரியர் பணியாற்றி வந்தார். தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் அவ்வப்போது பாலியல் ரீதியில் சில்மிஷங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 

அதுமட்டுமில்லாமல், சக ஆசிரியைகளுடன் இவர் ஆபாசமாகவும் பேசி வந்துள்ளார். நெடுங்காலமாகவே வினோத்குமார் இதுபோன்ற அநாகரீகமாக செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய சக ஆசிரியை ஒருவர் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரி ஒருவரிடம் நிகழ்ந்தவற்றை எல்லாம் கூறி புகார் மனு அளித்திருந்தார்.

மாணவிகளை தன்னைப்பற்றி வெளியே கூறினால் பரிட்சையில் தேர்ச்சி பெறாமல் செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் வினோத்குமார் மீது சமீபத்தில் விசாரணை தொடங்கியது. அப்போது அவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தைரியமாக தாங்கள் சந்தித்த இன்னல்களை பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

உடனடியாக நேற்று ஊர் பொதுமக்கள் பள்ளியின் வாசலில் அமர்ந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் வினோத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் அறிவித்தனர். உடனடியாக மாவட்ட கல்வித்துறை பொறுப்பாளரான முருகன் என்பவர் ஆசிரியர் வினோத்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை அறிந்த பின்னரே போராடிக்கொண்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவமானது ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.