சில நாட்களுக்கு முன்னர் கடலோரத்தில் சடலமாக இருந்த ஆசிரியையை, உடன் பணியாற்றிய ஆசிரியர் கொலை செய்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறுக்கப்பட்ட தலை முடி! நிர்வாண உடல்! பள்ளி ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டதன் பகீர் பின்னணி!

கேரளாவில் காசராகோடு என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு கூட்டுறவு வங்கி ஊழியராக சந்திரசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் ரூபாஸ்ரீ. ரூபாஸ்ரீயின் வயது 44. இவர் மியாபடவு பகுதியில் அமைந்துள்ள எஸ்.வி. மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
16-ஆம் தேதியன்று சக ஊழியர் ஒருவரின் வீட்டு திருமணத்திற்காக ஹோசங்காடி என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். செல்வதற்காக பகலிலேயே தன்னுடைய பள்ளியிலிருந்து கிளம்பிவிட்டார். முதலில் மஞ்சேஷ்வரில் அமைந்துள்ள தன்னுடைய மகளின் பள்ளிக்கு சென்றுள்ளார்.
மாலை நெடுநேரமாகியும் ரூபாஸ்ரீ வீடு திரும்பாததால் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர். அவரிடமிருந்த 2 செல்போன் எண்களுக்கு முயற்சி செய்து பார்த்தனர். ஒன்று சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. மற்றொன்றை யாரும் எடுக்கவில்லை. பயந்து போன உறவினருக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஹோசங்காடியிலிருந்து 2 கீ.மீ தொலைவில் ரூபாஸ்ரீயின் இருசக்கர வாகனம் கிடந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். மீண்டும் தேடுதல் வேட்டையை காவல்துறையினர் துரிதப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கடலோரத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடைத்துள்ளதாக மீனவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மோதர அடையாளங்களை வைத்து காவல்துறையினர் இழந்த பெண் ரூபாஷ்ரீ தான் என்று முடிவெடுத்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரூபாஷ்ரீ உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுத காட்சி கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
காவல்துறையினர் முதலில் உறவு ரூபாஸ்ரீயின் செல்போன் சிக்னலை சோதனை செய்தனர். அப்போது அவர் வெங்கட்ரமணா என்பவருடன் பேசியது தெரியவந்தது. உடனடியாக காவல்துறையினர் வெங்கட்ரமணாவுடன் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர் பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டார். "ரூபாஸ்ரீ பணியாற்றிவந்த அதே பள்ளியில் டிராயிங் மாஸ்டராக பணியாற்றினேன். இருவரும் நன்றாக பேசிக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமானோம். அப்போது எங்களுக்குள் கொடுக்கல் வாங்கல் இருந்தது.
இந்த கொடுக்கல் வாங்களினால், எங்களுக்குள் தகராறுகள் ஏற்பட்டன. அதன் பிறகு நான் அவரை அடிக்கடி தொந்தரவு செய்து வந்தேன். சம்பவத்தன்று நான் அவருடைய வீட்டிற்கு சென்றேன். அப்போது எங்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதங்கள் அதிகரித்தன.
ஆத்திரமடைந்த நான் அவருடைய தலையில் தண்ணீர் தொட்டியில் முக்கி கொலை செய்தேன். பின்னர் சடலத்தை கடற்கரையில் வீசினேன்" என்று கூறியுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.