திருமணம் செய்த கையோடு தான் படித்த பள்ளிக்கூடத்திற்கு சென்று மணமகன் செய்த நெகிழ வைக்கும் சம்பவம்! குவியும் பாராட்டு!

தன்னுடைய திருமணத்தை முன்னிட்டு இளைஞர் ஒருவர் படித்த பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் செய்த சம்பவம் மதுராந்தகத்தில் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் எனுமிடம் அமைந்துள்ளது. மதுராந்தகத்திற்கு உட்பட்ட கோழியாலம் என்ற இடத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் விக்னேஸ்வரன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு சென்ற ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. தன்னுடைய திருமணத்தை உழைப்பு தான் வேலை பார்க்கும் பள்ளிக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று விக்னேஸ்வரன் எண்ணினார்.

40,000 ரூபாய் செலவில் பள்ளிக்கு இரும்பு கேட், இடிந்து விழுந்து இருந்த ஒரு பகுதி சுற்று சுவரை சரி செய்தல், சுவற்றை வெள்ளை அடித்து அதில் தலைவர்களின் படத்தை வரைதல் ஆகிய காரியங்களை மேற்கொண்டார்.

மேலும் 25,000 விதைப்பந்துகளை உருவாக்கி பள்ளி மாணவர்களுடன் மரங்கள் மற்ற இடங்களில் வீசுமாறு கூறியுள்ளார். இவருடைய செயலானது சக ஆசிரியர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த கிராமத்து மக்கள் ஆசிரியரின் தரமான செயலை போற்றிப்புகழ்ந்து வருகின்றனர். இந்த சம்பவமானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரலாகி வருகிறது.