சென்னையில் நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் திறப்பு இல்லை..! ஏன் தெரியுமா?

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் நாளை மறுநாள் திறக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரத்திற்கு மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நோய் பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு மே 7ஆம் தேதி முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என நேற்று அறிவித்திருந்தது. 

இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வருகிற மே மாதம் 7ம் தேதி (நாளை மறுநாள்) சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருவதால் டாஸ்மாக் கடைகள் சென்னையில் திறக்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறைந்த பின்னரே டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.