தெலுங்கானா கவர்னராக தமிழிசை சவுந்தர்ராஜன் நியமனம்!

தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சௌந்தர்ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்


காலியாக உள்ள மாநிலங்களுக்கான ஆளுநர்களை குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு இரண்டு மாநிலங்களுக்கும் ஆளுநர் செயல்பட்டு வந்தார். அண்மையில் ஆந்திர ஆளுநராக அவர் மாற்றப்பட்ட நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் பதவி காலியாக இருந்தது.

தெலுங்கானா மாநில ஆளுநராக மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அவர் காலமான நிலையில் தற்போது தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.