தமிழக அமைச்சருக்கு தொற்று உறுதியாச்சு..! இப்ப என்ன சொல்லுவார் ஜெயகுமார்?

தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி என்று தி.மு.க.வினர் கூறிவந்த நேரத்தில் எல்லாம், பொய் செய்தி என்று அ.தி.மு.க.வினர் கூறி வந்தனர்.


அன்பழகனுக்கு கொரோனா பரிசோதனை செய்தோம், ஆனால், நெகடிவ் என்று அமைச்சர் ஜெயகுமார் சொல்லிவந்தார். ஸ்டாலின் இதுகுறித்து விசாரித்த நேரத்தில், அவரிடம் உண்மையை ஒப்புக்கொண்ட அன்பழகன், அதன்பிறகு பல்டியடித்தார். இந்த நிலையில், கே.பி.அன்பழகனுக்கு கொரோன தொற்று உறுதி என்று மியாட் மருத்துவமனை இன்று செய்திக்குறிப்பி வெளியிட்டுள்ளது.

அமைச்சருக்கு லேசாக இருமல் இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா பாசிடிவ் என்று தெரியவந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. இதுவரை இது தி.மு.க.வினரின் அசட்டையால்தான் வருகிறது என்று கேலி செய்துவந்த அ.தி.மு.க.வினர் இனி என்ன சொல்லப் போகிறார்களோ..?

முதலில் அமைச்சர் மீண்டு வரட்டும்.