நாளை காலை வரை மக்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது...! ஊரடங்கு நீடிக்கும்! தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது 350 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதன் காரணமாக இன்று இந்தியா முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதனால் தமிழகம் முழுவதும் சாலைகள் மற்றும் பொது இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் தமிழக அரசின் அறிவுறுத்தலின் பெயரில் வீடுகளிலேயே இருந்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

 வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியாக தமிழக அரசு தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் சுய ஊரடங்கை நாளை காலை 5 மணி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.