தமிழகத்தில் இன்று மேலும் 74 பேருக்கு கொரோனா..! மொத்த எண்ணிக்கை 485ஆக உயர்ந்தது! உயிரிழப்பு 3! சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் இன்று மேலும் 74 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 485 ஆகி உயிரிழப்பு 3ஆக அதிகரித்துள்ளது.


சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது. தமிழகத்தில் இன்று மேலும் 74 பேருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 3ஆக உயர்ந்துள்ளது.

இன்று கொரோனா உறுதியான 74 பேரில் 73 பேர் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். மேலும் ஒருவர் அந்த மாநாட்டிற்கு சென்று வந்தவர் இல்லை. இன்று காலை விழுப்புரத்தில் ஒருவர் கொரோனாவுக்கு பலியான நிலையில் தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்மணி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா உறுதியான 485 பேரில் 422 பேர் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். இவ்வாறு பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.