அம்பன் புயல் ஒரு மான்ஸ்டர்..! யாரும் தப்பிக்க முடியாது..! பீதி கிளப்பும் வெதர்மேன்!

இதுவரை பல்வேறு புயல்களால் ஏமாந்த நிலையில் ஆம்பன் புயல் நிச்சயமாக சென்னையை தாக்காது என்று வெளியாகியுள்ள செய்தியானது சென்னை மக்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.


2 நாட்களுக்கு முன்னர் ஆம்பன் புயல், உருவானதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டது. இந்த புயல் வங்கத்தின் டிகா-வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே சென்னையின் கிழக்கு திசையில் 650 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புயலானது தமிழகத்தை தாக்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து விட்டது. அதுமட்டுமின்றி இந்த புயல் சென்னை அருகே கரையைக் கடக்கும் எந்தவித வாய்ப்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை சில புயல்கள் தமிழகத்தை நிச்சயம் தாக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இந்தப் புயல் தாக்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று முதலிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் வழக்கம்போல தமிழக மக்கள் நம்பி ஏமாறுவதற்கு தேவையில்லை. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், "நிச்சயமாக மே மாதத்தில் உருவாகும் புயல்கள் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதேபோன்று இந்த ஆம்பல் புயலும் மான்ஸ்டர் போல தாக்கும் தன்மையுடையது. அருகே கரையை கடக்கும் போது மட்டும்தான் புயலின் வேகம் குறைவதற்கான வாய்ப்புள்ளது.

இருப்பினும், இந்த புயல் அப்பகுதிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் தமிழ்நாட்டிற்கு இந்த புயல் வழக்கத்திற்கு மாறாக தமிழகத்திற்கு வெப்ப காற்றை வீசக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த புயலானது தமிழக மக்களுக்கு எந்தவித பலனையும் தராது என்றாலும், கடந்த முறைகள் போன்று மக்கள் நம்பி ஏமாற வேண்டிய அவசியம் இம்முறை இருக்காது" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த செய்தியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.