தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக 500 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
தனித்தனி செல்போன் சார்ஜர், ஏசி! விசாலமான இருக்கை! ஆம்னி பஸ்களுக்கு சவால் விடும் அரசு சொகுசு பஸ்!
அதில் 150 பேருந்துகள் சொகுசு பேருந்துகள் ஆகும். அது தனியார் சொகுசுப் பேருந்துகளை விட தரமாக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பதவியேற்ற பிறகு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 500 சிறப்பு பேருந்துகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார். மற்றும் பேருந்துகளில் வழித்தடங்களையும் அதிகப்படுத்தியுள்ளார். அதில் 150 சொகுசு பேருந்துகளை வழங்கியுள்ளார்.
அதில் தனியார் சொகுசு பேருந்துகளில் உள்ளது போலவே ஒவ்வொரு சீட்டிற்கு மேல் விளக்கு மற்றும் செல்போன் சார்ஜர் மற்றும் செல்போன் வைக்க தனியாக ஒரு ஸ்டாண்ட் போன்ற வசதிகள் உள்ளன. மற்றும் இருக்கைக்கே மேலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் ஏசி, மாற்றுத் திறனாளிகளுக்கு தனியே சீட் மற்றும் சீட் பெல்ட் வசதி மற்றும் ஒவ்வொரு இருக்கைக்கு இடையே சரியான இடைவெளி மற்றும் அதிக நேர பயணத்திற்காக புஷ்பேக் வசதி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பேருந்துகளில் தானியங்கி கதவுகள் மற்றும் அடுத்த நிறுத்தத்திற்கான அறிவிப்பு அங்கு உள்ள ஸ்பீக்கரில் அறிவிப்புகள் அடிக்கடி அறிவிக்கப்படும். மற்றும் பேருந்திலேயே பத்து ரூபாய் அம்மா குடிநீர் பாட்டில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் சொகுசுப் பேருந்தில் உள்ள அனைத்து வசதிகளையும் பொதுமக்கள் அரசு பேருந்திலேயே கிடைக்கும் பொருட்டு தமிழக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்க விழாவில் பொதுமக்கள் அனைவரும் மிக குறைந்த கட்டணத்தில் தனியார் சொகுசுப் பேருந்துகள்களில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் அரசு பேருந்திலேயே கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.