அண்ணாமலையும் கேசவ விநாயகமும் 1,000 கோடி ரூபாயை சுருட்டிட்டாங்க… திகில் புகார்

தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி கணிசமான வாக்குகள் பெற வேண்டும் என்பதற்காக 1,000 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், அந்த தொகையில் பெரும்பாலானதை அண்ணாமலையும் அவருக்கு நெருக்கமான முக்கியத் தலைகளும் பதுக்கிக் கொண்டதாகவும் தினம் ஒரு பஞ்சாயத்து கமலாயத்தில் கேட்கிறது. இதனாலே கேசவவிநாயகம் தமிழகத்தில் இருந்து மாற்றப்படுவதாக பேசப்படுகிறது.


 தேசியத் தலைமை ஒவ்வொரு வி.ஐ.பி. தொகுதிக்கும் 40 கோடி ரூபாய் என தென் சென்னை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை, நீலகிரி ஆகிய 5 தொகுதிகளுக்கு 200 கோடி ரூபாய் அனுப்பி வைத்தது. மாநிலக் கட்சி நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகள் என மதுரை, திருப்பூர், வட சென்னை போன்ற தொகுதிகளுக்கு தலா 10 கோடிகளும், தேறவே தேறாது எனக் கணிக்கப்படும் சிதம்பரம் தொகுதிக்கு 8 கோடி ரூபாயும், நிச்சயம் வெல்வோம் என பா.ஜ.க. கணித்த தேனி, வேலூர், ராமநாதபுரம், தருமபுரி போன்ற கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளுக்கு தலா 30 கோடி ரூபாயையும் அனுப்பியது.
இதுதவிர, சமூக வலைத்தளங்களுக்கு செலவிட 150 கோடி ரூபாய் மற்றும் பிரச்சாரத்துக்கு 100 கோடி ரூபாய் என இப்படி மொத்தம் 1000 கோடி ரூபாயை தமிழகம் முழுவதும் அனுப்பி வைத்தது. அதில் 4 கோடி ரூபாயை நயினார் நாகேந்திரனிடமும், 1 கோடி ரூபாயை இதர பா.ஜ.க.வினரிடமிருந்தும் மாநில போலீசார் பிடித்தனர்.
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை அவர்களுக்கு வருமானம் என்பது லோக்கல் வி.ஐ.பி.க்களிடம் மிரட்டி வசூலிக்கும் தொகையைத் தாண்டி 5 வருடங்களுக்கு ஒருமுறை தேசியத் தலைமை கொடுக்கும் இந்தப் பணமாகும். ஆகவே இந்த முறை தேசியத் தலைமையிடமிருந்து வந்த பணத்தை என்னதான் செலவு செய்தாலும் பா.ஜ.க. தமிழகத்தில் தேறாது எனத் தெரிந்துகொண்ட கட்சி நிர்வாகிகள் அப்படியே அமுக்கிக் கொண்டார்கள்.
இந்தப் பணம் எப்படி செலவு செய்யப்படுகிறது என்பதைக் கண்காணிக்க ஒரு கமிட்டி அமைக்கப் பட்டது. அந்தக் கமிட்டி உறுப்பினர்களாக மாநிலப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பா.ஜ.க. மா.த. மற்றும் அமர் பிரசாத் ரெட்டி போன்றவர்கள் இருந்தனர். வந்த பணத்தில் பாதியை இவர்களே பிரித்து எடுத்துக் கொண்டார்கள். மிச்சப் பணம்தான் வேட்பாளர்களுக்குச் சென்றது. அதில் ஒரு பகுதிதான் கட்சிக்காரர்களுக்குச் சென்றது. தங்களுக்கு வந்த பணத்தை கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் வெளியே விடாமல் கமுக்கமாக இருந்து கொண்டார்கள். இதனால் ஒரு சில தொகுதிகள் தவிர தமிழகம் முழுவதும் தேர்தல் பூத்துகளில் உட்காரக் கூட பா.ஜ.க. சார்பில் ஆட்கள் வரவில்லை.
தேர்தல் அன்று நிகழ்ந்த இந்தச் சூழ லைப் பார்த்த தேசியத் தலை மை, வேட் பாளர்களைக் கேள்வி கேட்டது. அதற்குப் பதில் சொல்லும் விதமாக வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் மீதும், கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் மீதும் பரஸ்பரம் புகார் தெரிவித்து வருகிறார்கள். திருவண்ணாமலையில் போட்டி போட்ட அஸ்வத்தாமன் என்கிற வழக்கறிஞர் கொடுத்த கணக்கு பா.ஜ.க. வட்டாரங்களில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திருவண்ணாமலையில் கலந்துகொண்ட பொதுக் கூட்டத்துக்கு 50 லட்சம் ரூபாய் செலவாகியது என அஸ்வத்தாமன் கணக்குக் கொடுத்துள்ளார். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆயிரம் பேர். ஒரு ஆளுக்கு இவர் 5000 ரூபாய் கொடுத்தாரா எனச்சொல்லிச் சிரிக்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
நல்லவேளை, யோகி ஆதித்யநாத் திருவண்ணா மலைக்கு வர இருந்தார். அஸ்வத்தாமனைப் பற்றிய தகவல்கள் சரியாக இல்லை என்பதால் யோகி தனது விசிட்டை கேன்சல் செய்தார். ஒருவேளை யோகி வந்திருந்தால் அவரது பொதுக்கூட்டத்துக்கு 5 கோடி ரூபாய் செலவாகியிருக்கும் என அஸ்வத்தாமன் கணக்குக் கொடுத்திருப்பார் என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள். இந்தப் பிரச்னைகளிலிருந்து தப்பிக்க ஏற்கெனவே ஒத்துக்கொண்ட திட்டப்படி பா.ஜ.க. மா.த. கேரளாவுக்குப் பறந்துவிட்டார். ‘பா.ஜ.க. மா.த.’ மட்டும் இந்தத் தேர்தலில் கமுக்கமாக அடித்தது 1000 கோடி ரூபாய் என்கிறது கமலாலய வட்டாரம்