தமிழ் மொழியை வளர்க்கச் சொன்னால் கனிமொழியை வளர்க்கிறார் ஸ்டாலின்! தமிழிசை அதிரடி

சென்னையில் பேசிய தமிழிசை சவுந்திரராஜன் ஸ்டாலின் மற்றும் கனிமொழியை கடுமையாக தாக்கி பேசினார்.


சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழிசை பேசியதாவதுஇ தேர்தல் தேதி அறிவிக்கப்படும் இந்த நேரத்திலும் இந்த நிகழ்ச்சி நடைபெறும் இந்த நேரம் 2019 தேர்தல் வெற்றி நிகழ்ச்சியாகவே இதை எடுத்துக் கொள்கிறோம்

40ம்  நமதே நாலும் நமது - மு க ஸ்டாலின் பாஜக என்ன செய்கிறது என்று கேட்கிறார். முதலில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள். தலைநிமிர்ந்து கோவிலுக்கு உள்ளே செல்லும் கட்சி பாரதிய ஜனதா கட்சி. 

ஆனால் நீங்களும்  தலைகுனிந்து செல்கிறீர்கள்.காமராஜரை பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு என்ன உள்ளது. மதுரை எங்கே இருக்கிறது தமிழகத்தில் இருக்கிறது.  திருப்பூர், திருச்சி இது எல்லாம் தமிழகத்தின் உள்ளே  தான் இருக்கிறது. 

ஆனால் முக ஸ்டாலின் இது ஜப்பானில் இருக்கிறது என்று நினைக்கிறார். இலங்கை தமிழர்களை பாதுகாக்க முடியாத , கூட்டணி உங்க கூட்டணி. தமிழ் மொழியை வளர்க்க வில்லை ஆனால் நீங்கள் உங்கள் தங்ககை கனிமொழியை தான் வளர்க்கிறீர்கள்.  

நீங்கள் எவ்வளவு சேற்றை  வாரி வீசினாழும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். இவ்வாறு தமிழிசை சவுந்திரராஜன் பேசினார்.