நட்சத்திர ஓட்டலில் தமிழிசை செல்போனுக்கு ஏற்பட்ட விபரீதம்! என்னாச்சு தெரியுமா?

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் செல்போனை செய்தியாளர் சந்திப்பின் போது மர்ம நபர்கள் திருடியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழிசை சௌந்தரராஜன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆவார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரான கனிமொழியிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.

அதிலிருந்து இவருக்கு நேரம் சரியில்லை. சமீபத்தில் விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, இவருடைய மகன் திடீர் என்று "பாஜக ஒழிக பாஜக ஒழிக" என்று கூச்சலிட்டது அக்கட்சியினுள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள் நேற்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டார். அந்த சந்திப்பில் தமிழிசை சௌந்தர்ராஜனும் பங்கேற்றார். இந்நிலையில் சந்திப்பு மிகவும் காரசாரமாக சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் தமிழிசை சௌந்தரராஜனின் செல்போனை திருடிவிட்டனர்.

நெடுநேரம் கழித்தே தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு இதைப் பற்றி தெரிய வந்துள்ளது. அங்கிருந்த காவல்துறையினர், செய்தியாளர்களின் கேமரா அல்லது செல்போன் மூலம் ஏதேனும் ஆதாரம் தெரிகிறதா என்பதனை ஆராய்ந்து வருகின்றனர்.

மாநில தலைவரின் செல்போன் என்பதனால், கட்சி சம்பந்தப்பட்ட முக்கிய செய்திகள் இருக்கும். யாரேனும் ஹேக் செய்துவிட்டால் அது பெரும் குழப்பத்தை விளைவிக்கும் என்று அவர் வருந்துகிறார்.

இந்நிலையில், அக்காவுக்கு நேரம் சரியில்லாத காரணத்தினால் ஏதேனும் ஜோதிடர்களை சந்தித்த வரலாம் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றனர்.