கனடா தேர்தலில் சாதித்த தமிழன்‌‌...! ஒட்டு மொத்த மக்கள் ஆதரவுடன் வெற்றி!

கனடாவில் நடைபெற்ற தேர்தலில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் வென்று சாதனை படைத்துள்ளார்.


கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் ஜஸ்டின் புரோடோ அவர்களின் லிபரல் கட்சியின் சார்பாக நின்று வெற்றி பெற்றுள்ளார். கனடா நாட்டில் நாடாளுமன்றத்தில் மொத்தம் 338 இருக்கைகள் உள்ளன. இதில் 170 இருக்கைகள் பெரும்பான்மைக்கு தேவைப்படுகிறது . அதில் 156 இருக்கைகளை ஜஸ்டின் அவர்களின் கட்சி கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது.  

லிபரல் கட்சியின் சார்பில் டொரண்டோவில் உள்ள ஸ்கார்பாரோ - ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்ட இலங்கை தமிழர் கேரி ஆனந்தசங்கரி வெற்றி பெற்றுள்ளார். மேலும் இவர் ஒரு மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலரும் ஆவார். மக்களின் நலனுக்காக பாடுபட்டு அயராது உழைக்கும் குணத்தை கொண்டவர்.

மேலும் இவர் "எங்கள் உள்ளூர் சமூகம்" என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார். கடந்த 1980 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு அயர்லாந்துக்கு குடிபெயர்ந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 1983 ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்தார். அதற்குப் பின்பாக மனித உரிமை வழக்கறிஞர் ஆக கனடா நாட்டில் நற்பணிகளை செய்து வருகிறார். 

அதனைத் தொடர்ந்து கேரி அவர்களுக்கு அரசியலில் ஆர்வம் அதிகரித்ததன் காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி அடைந்து கன்னட நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ஐக்கிய நாட்டு சபையில் வழக்கறிஞர்களின் உரிமைக்காக போராடி வெற்றி கண்ட பெருமை இவரையே சாரும். தெற்காசிய பார் அசோசியேசன் இளம் பயிற்சியாளர் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியவர்கள் செய்த சமூக சேவையின் காரணமாக கேரி குயின்ஸ் கோல்டன் மற்றும் டயமண்ட் ஜூபிலி பதக்கங்களைப் பெற்றுள்ளார்.