ஓ மை காட்! யோகி பாபுவுக்கு ஜோடியான தமன்னா! எந்த படத்தில் தெரியுமா?

நடிகை தமன்னா கடைசியாக தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணே கலைமானே படத்தில் நடித்திருந்தார்.


இந்த படம் சமீபத்தில் ரிலீசாகி அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இந்நிலையில் அவர் தனது அடுத்த தமிழ் படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்ற செய்திகள் வந்துள்ளது. 

இந்த படத்தின் அதே கண்கள் படத்தின் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்குகிறார். பெண்களை மையமாக வைத்து ஒரு காமெடி திரில்லர் படமாக இந்த படம் எடுக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தில் நிறைய காமெடியர்கள் நடிக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் யோகி பாபு. மேலும் இந்த படத்தில் மன்சூர் அலிகான் மற்றும் சத்யன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். அச்சம் என்பது மடமையடா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக் அர்த்தர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் நடிகை தமன்னா தற்போது தேவி 2 படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.