சினிமாவில் மட்டும் அல்ல டிவியிலும் தளபதி தான் கெத்து! வெளியானது பிகில் ஆடியோ லாஞ்ச் டிஆர்பி ரிப்போர்ட்! எத்தனாவது இடம் தெரியுமா?

புதிய சாதனையை படைத்த தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் .


தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் பிகில் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முழு உரிமையும் சன் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இதில் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி தனியார் கல்லூரி ஒன்றில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது. சங்கரின் இசை வெளியீட்டு விழாவின் சாதனையை முறியடித்தது விஜயின் இசை வெளியீட்டு விழா என்பது குறிப்பிடத்தக்கது. 12.86 TRP/9594000 ரேட்டிங்கை பெற்றது பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா. இது இதற்கு முன் நிகழ்ச்சிகள் பெற்ற TRP ரேட்டிங்கை விட மிகவும் அதிகம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் திரை உலகத்திலேயே இவ்வளவு அதிகமான பார்வையாளர்களை கொண்டது பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தான் என்பது பெருமைக்குரிய ஒன்று. 

இத்திரைப்படத்தின் இசையை இசைப்புயல் ஏ .ஆர் .ரஹ்மான் அமைத்துள்ளார் . இந்த திரைப்படமானது கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.