துவங்கியது தல 60 சூட்டிங்..! படத்திற்கும் மாஸ் டைட்டில்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த டைரக்டர்! என்ன தெரியுமா?

தல அஜித் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.


H.வினோத் இயக்கத்தில், தயாரிப்பாளர் போனி கபூரின் தயாரிப்பில் , தல அஜித்தின் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படத்திற்கு வலிமை என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கும் என்று இருந்த நிலையில் நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் மிகவும் பிஸியாக இருந்தமையால் இன்று கோலாகலமாக பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

தல அஜித் நடிக்கும் 60வது திரைப்படம் "வலிமை" யாகும். இந்த திரைப்படத்தை இயக்குனர் H.வினோத் இயக்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலிமை திரைப்படத்தில் தல அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்க போகிறார் என்று படக்குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தல அஜித்தின் 60 வது திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவங்கியதை அறிந்த ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர்.