எனக்கு மொத்தம் 3 டார்லிங்..! விவாகரத்து..! வெளிப்படையாக பேசிய விஜய் டிவி டிடி..!

கலாட்டா நட்சத்திர அவார்ட் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


இந்த கலாட்டா நட்சத்திர அவார்டு வழங்கும் விழாவில் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி சின்னத்திரை தொகுப்பாளினியாக வெற்றிகரமாக 15 ஆண்டுகள் பயணித்ததை அடுத்து அவருக்கு சிறந்த தொகுப்பாளினி விருது வழங்கப்பட்டது.

அந்த விருதை யாரும் எதிர்பாராத வண்ணம் திவ்யதர்ஷினியின் நீண்ட கால நண்பர் ராஜ்குமார் , திவ்யதர்ஷினிக்கு வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல் எங்கள் நண்பர் கூட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி சென்றுவிட்டோம். எங்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் திவ்யதர்ஷினி மட்டுமே மிகவும் ஆர்வமாக செயல்படுவார் என்று அவரது நண்பர் ராஜ்குமார் கூறினார்.

விருதைப் பெற்றுக் கொண்டு பேசிய திவ்யதர்ஷினி தான் தன்னுடைய நண்பர் ராஜ்குமார் இடமிருந்து இந்த விருதைப் பெற்றுக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறினார் . பின்னர் தானும் ராஜ்குமாரும் கடந்த 15 வருடங்களாக நண்பர்களாக பழகி வருகிறோம் என்றும் கூறிய அவர் சொல்லப் போனால் நாங்கள் ஐந்து பேரும் மிகுந்த நெருங்கிய நண்பர்கள் என்று கூறி அவர்களது பெயரை சொல்ல ஆரம்பித்தார்.

அதாவது ராஜ்குமார், டார்லிங் நெல்சன், டார்லிங் விவேக், டார்லிங் நிர்மல், என குறிப்பிட்டு கூறினார். டிடி தன்னுடைய நண்பர்களை டார்லிங் என்று கூறிய வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. டிடி தற்போது தன் காதல் கணவரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை விவாகரத்து செய்து விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.