வணக்கம் தமிழா அசாரை 2வது கணவன் ஆக்கும் பிரபல டிவி நடிகை..! முதல் கணவருக்கு ஷாக்..!

சென்னை: சீரியல் நடிகை ஹரிப்பிரியா அவரது கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.


கனா காணும் காலங்கள், கல்யாணம் முதல் காதல் வரை, லட்சுமி வந்தாச்சு, பிரியமானவளே உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்தவர் ஹரிப்பிரியா. தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி தொடரில் நடித்து வருகிறார். இவர், கடந்த 2012ம் ஆண்டு சக நடிகர் விக்னேஷ் குமாரை காதல் திருமணம் செய்தார்.  

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், கண்மணி சீரியலில் நடிக்க தொடங்கிய நாள் முதலாக அவரது நடத்தையில் மாறுதல் ஏற்பட தொடங்கியுள்ளது. சன் டிவியில் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கி வரும் அசார் என்பவருடன் ஹரிப்பிரியா நெருங்கிப் பழகி வருகிறார். அசாரை இரண்டாவது திருமணம் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளாராம். இருவரும் நெருக்கமாக ஊர் சுற்றும்  புகைப்படங்களை ஹரிப்பிரியா, அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் ''என்னை புரிந்துகொண்ட ஆண் துணை அசார்; எனது பிறப்பிற்கு உண்டான காரணத்தை  அசாருடன் பழகியபோது அறிந்துகொண்டேன். எங்களை இறைவன் ஆசிர்வதிக்க வேண்டும்,'' என, ஹரிப்பிரியா பதிவிட்டுள்ளார்.  இதற்கிடையே, விக்னேஷ் குமாரை ஹரிப்பிரியா விவாகரத்து செய்துவிட்டார். இதனால், அவர் அசாரை 2வது திருமணம் செய்வது உறுதி என, அவரது சமீபகால நடவடிக்கைகளை வைத்து சின்னத்திரை வட்டாரங்களில்  தகவல் பரவி வருகிறது.