நடிகைகளின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து அவர்களை மிரட்டிப் பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆபாச படம் எடுத்து மிரட்டல்! 22 வயது இளைஞனிடம் சிக்கிய டிவி நடிகைகள்!

மும்பையைச் சேர்ந்த 29 வயது நபர் சித்தார்த் சர்வோதய். இவன் தொலைக்காட்சி நடிகைகளிடம் தன்னை இயக்குநர் என அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களுக்குவாய்ப்புத் தருவதாகக் கூறி அவர்களது பல்வேறு புகைப்படங்களை பெறுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
பின்னர் அவற்றை ஆபாசமான முறையில் மார்ஃபிங் செய்து அவர்களிடம் காண்பித்து, அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டி பணம் பறிப்பது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. இதே பாணியில் தொலைக்காட்சி நடிகை ஒருவரிடம் 1 லடசம் ரூபாய் கேட்டு அவன் மிரட்ட அந்த நடிகை நேராக காவல் நிலையத்துக்குச் சென்று விட்டார்.
அவர் புகார் அளித்தத்தைத் தெரிந்து கொண்ட சித்தார்த் தலைமறைவானான். அவன் தன் செல்ஃபோனை அணைத்து வைத்ததோடு தன் இடத்தை மாற்றிக்கொண்டே இருந்ததாகவும் தன்னிடம் போலீசார் நெருங்கி விடாமல் இருக்க அவர்களை தவறாக வழிநடத்தும் பல தந்திரங்களை கையாண்டதாகவும், இந்நிலையில் அவனை 12 நாள் போராட்டத்துக்குப் பின் கண்டுபிடித்து கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் அவனால் பாதிக்கப்பட்ட பல்வேறு நடிகைகளைக் கண்டுபிடித்த போலீசார் அவர்களிடம் இருந்தும் புகார்களை பெற்று வழக்கை வலுவாக்கி வருகின்றனர். அவன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.