முழு போதை..! படு வேகம்..! டிவி நடிகை ஓட்டிச் சென்ற காரால் சாலையில் ஏற்பட்ட விபரீதம்! யார் தெரியுமா?

திருவனந்தபுரம்: போதையில் கார் ஓட்டி சாலை விபத்து ஏற்படுத்திய டிவி நடிகையை போலீசார் கைது செய்தனர்.


மலையாளத்தில் ஒளிபரப்பாகும் டிவி சீரியல்களில் நடிப்பர் சித்திரலேகா. 38 வயதாகும் இவர், திருவனந்தபுரம் ஜங்ஷன் பகுதியில் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்றுள்ளார். இதில், அவருக்கு முன்னால் சென்ற ஸ்கூட்டர்கள் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில்  ஸ்கூட்டரில் பயணித்த 2 பெண்கள் காயம் அடைந்தனர்.

இதுதவிர சாலையில் சென்ற மற்ற கார்கள் மீதும் தனது காரை மோதவிட்டு  சித்திரலேகா விபத்து ஏற்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் நடிகையை சுற்றி வளைத்து பிடித்ததோடு, இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  விரைந்து வந்த போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மது போதையில் இருந்த  நடிகை சித்திரலேகாவை கைது செய்தனர். சிறிது நேரத்தில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.