தேனி தொகுதியில் களம் இறங்கும் டிடிவி! மரண பீதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்!

நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதை எதிர்த்து அமமுஇ துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை டிடிவி தினகரன் நேற்று காலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து சென்னையில் டிடிவி தினகரன் செய்து அவர்களை சந்தித்து பேசினார் ‌

அப்போது வேட்பாளர் தேர்வில் தங்கள் கட்சி மிகவும் கவனத்துடன் நடந்து கொண்டதாகவும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை அறிவித்துள்ளதாகவும் தினகரன் கூறினார். முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள வேட்பாளர்கள் விரைவில் வெளியிட உள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்று டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு தான்  திண்டுக்கல் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்றுள் ளதை தினகரன் சுட்டிக்காட்டினார்.

தற்போதும் கூட தேனி தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்று தனது கட்சி தொண்டர்கள் விரும்புவதாக தினகரன் கூறினார். தனது தொண்டர்கள் விரும்பும் பட்சத்தில் தேனி தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தினகரன் குறிப்பிட்டார்.

இதற்கிடையே நேற்று மாலை அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் போட்டியிடும் தகவலை அறிந்தேன் தினகரன் காலையிலேயே அங்கு தான் போட்டியிட உள்ளதாக சூசகமாக கூறியுள்ளார். அரசியலைப் பொறுத்தவரை ஓபிஎஸ் தான் தினகரனுக்கு பரம எதிரி. எனவே தேனி தொகுதியில் அவரது மகனுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றிபெற்ற காட்ட வேண்டும் என்று தினகரன் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடும் பட்சத்தில் அங்கு ஓபிஎஸ் மகனுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. இதனால் தற்போது ஓபிஎஸ் மகன் ஆதரவாளர்கள் மரண விதிகள் இருப்பதாக கூறப்படுகிறது.