1 ரூபாய்க்கு ஆண்களுக்கு டி-ஷர்ட்! 10 ரூபாய்க்கு பெண்களுக்கு நைட்டி! சென்னை ஆஃபர்!

துணிக்கடை ஒன்றில் ஏழை எளிய மக்களுக்காக குறைவான வகையில் புத்தாடைகள் விற்கப்பட்ட சம்பவமானது வண்ணாரப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்.சி.ரோடு எனும் இடம் அமைந்துள்ளது. இந்த பெருமாள் டெக்ஸ் என்ற பெயரில் ஆனந்த் என்பவர் துணிகக்டை ஒன்றை நடத்தி வந்துள்ளார். 

தீபாவளி பண்டிகை வருவதையொட்டி  ஏழை எளிய மக்களுக்கும் புத்தாடைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆனந்த் தன் கடையில் வித்தியாசமான சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதாவது ஆண்களுக்கான டீ-சர்ட்  1 ரூபாய்க்கும், பெண்களுக்கான நைட்டி 10 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

19-ஆம் தேதி தொடங்கிய இந்த விற்பனையானது காலை 10 மணி முதல் 11 மணி வரை தினமும் நடைபெற்று வருகிறது. 26-ஆம் தேதி வரை இந்த விற்பனையானது நடைபெற உள்ளது. குறைந்த விலையில் ஆடைகள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

உடைகளை இலவசமாக வழங்குவதற்கு பதிலாக, குறைந்த விலையில் வழங்கினால் அது வாங்கி செல்லும் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று சலுகை அறிமுகப்படுத்திய உரிமையாளர் ஆனந்த் கூறியுள்ளார். கூட்டம் அலை மோதுவதால் கடையின் வாயிலில் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது வண்ணாரப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.