விமானத்தில் இனி யாரும் பறக்க கூடாது! விமான நிலையத்தில் அரங்கேறிய நூதன போராட்டம்!

Flugstreik எனும் வலைத்தளம் 2020-ம் ஆண்டிற்குள் மக்கள் விமான பயணத்தை முழுவதும் தவிர்க்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளது.


ஏனெனில் விமான பயணத்தினால் காற்று மாசு அடைவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர விமான நிலையத்தில் நேற்று 70 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விமான பயனத்தின்எதிர்மறையான தாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர்.தரையில் படுத்தவாறு போராட்டம் நடத்திய அவர்கள் பின்னர் FLYERS -களை விநியோகம் செய்யும் ஷாப்பிங் பகுதியில் நடந்து சென்றனர்.

மேலும் விமான நடவடிகைகளுக்கு இடையூறு விளைவிக்காததாலும்,கோடை விடுமுறையின் தொடக்கத்தில் இந்த போராட்டம் நடத்தப்பட்டதாலும் பாதிப்பு எதுவும் இல்லை என விமான நிலைய செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த போராட்டமானது பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி சில நிமிடங்கள் மட்டுமே நடந்ததால் சூரிச் விமான நிலையத்தில் அமைதி நிலவியது.