நடிகர் சூர்யாவின் நடிப்பில் காப்பான் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 20-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது .
சிங்கம் 4வது பார்டுக்கு தயாராகும் சூர்யா! டைரக்டர் ஹரியுடன் முக்கிய ஆலோசனை!
மோகன்லால் ,ஆர்யா ,சமுத்திரகனி போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கும் காப்பான் திரைப்படத்தை கேவி ஆனந்த் இயக்கியுள்ளார் .
தற்போது நடிகர் சூர்யா சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்துவருகிறார் . இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா மீண்டும் இயக்குனர் ஹரியுடன் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .மேலும் இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் சொந்த நிறுவனமான 2d என்டர்டைன்மென்ட் பேனல் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி மீண்டும் இணைவதால் இந்த திரைப்படம் சிங்கம் நான்காம் பாகமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது .
நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி கூட்டணியில் ஏற்கனவே சிங்கம் 1, சிங்கம் 2 , சிங்கம் 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .