பேரன்கள் பெயரில் பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்த ரஜினி..! எவ்வளவு தெரியுமா? மயக்கம் வரவழைக்கும் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேரன்களுக்காக வங்கியில் எவ்வளவு டெபாசிட் செய்து வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர்களது இரண்டு மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மூன்று பேரன்கள் உள்ளனர். யாத்ரா, லிங்கா , வேத் என்ற இந்த மூன்று பேரன்களுக்கு அவர்களது எதிர்காலம் கருதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வங்கியில் எவ்வளவு டெபாசிட் செய்து வைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலின் படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மூன்று பேரன்களின் பெயரிலும் தலா 25 கோடி ரூபாயை வங்கி கணக்கில் டெபாசிட் செய்து வைத்துள்ளாராம். இந்த 25 கோடி ஆனது அவர்களது பேரன்கள் 25 வயதாகும்போது 90 கோடியாக மாறுமாம். மேலும் அவர்களது பேரன்களின் 22வது வயதில் இருந்து அவர்களுக்கு மாதம் வட்டி மட்டுமே 50 லட்சம் கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு முன்னதாகவே திரைக்கு வர உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது .