இனிமே அப்டி பண்ணாத கண்ணா..! வீட்டிற்குள் அழைத்து ரஜினி சொன்ன வார்த்தை..! நெகிழ்ந்து போன ரசிகர்!

அதிவேகமாக பைக்கில் தன்னைப் பின் தொடர்ந்து வந்த ரசிகர் ஒருவரை அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவுரை கூறியுள்ளார்.


பொதுவாகவே நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களிடம் பெரும் அன்பாக நடந்து கொள்பவர். மேலும் தன்னுடைய ரசிகர்கள் மீது அக்கறை கொண்ட நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பல நல்ல கருத்துக்களையும் அறிவுரைகளையும் கூறுவது வழக்கம். அந்தவகையில் தற்போது தன்னுடைய ரசிகர் ஒருவருக்கு கூறிய அறிவுரை ஆனது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

அதாவது நேற்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு சென்று இருக்கிறார் . அப்போது அவரது காரை ரசிகர் ஒருவர் மிக வேகமாக இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து ரஜினியின் வீடுவரை சென்று உள்ளார். ரஜினியின் வீட்டிற்கு சென்ற உடன் தன்னுடைய வாட்ச்மேனை அழைத்து தன்னை பாலோ செய்துவந்த இளைஞரை உள்ளே அழைத்து வருமாறு கூறியிருக்கிறார்.

அப்போது அந்த இளைஞரிடம் , இம்மாதிரியான ஆபத்தான முறையில் பைக் ஓட்டாதீர்கள் என்று அன்பாக அறிவுறுத்தி உள்ளார். இதனைக் கேட்டு நெகிழ்ந்து போன அந்த இளைஞர் , நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து புகைப்படங்களை எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.