சிறப்பான தரமான ரஜினி படம் – பேட்ட விமர்சனம்!

வழக்கமான பழிக்குப் பழி கதையை ரஜினியை வைத்து தெறிக்க தெறிக்க ஸ்டைலாக இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.


ஒரு காலேஜ், அங்க சீனியர் பசங்க பண்ற ரேகிங் திடீர்னு அங்கு வர்ற வார்டன் ரஜினி, அங்கு இருக்குற சிஸ்டத்தை சரி பண்றார். இதனால காலேஜ்ல கேன்டீன் டென்டர் எடுத்த லோக்கல் கைக்கு கோபம் வருது. உடனே  வார்டன் ரஜினியை போட்டுத்தள்ள ஆள் அனுப்புறாரு. ஆனா அங்க ஒரு ட்விஸ்ட். அதன் பிறகு படம் உத்தரபிரதேசத்திற்கு போய்டுது.

   காலேஜ் வார்டனா ரஜினி வர்ற சீன்ல இருந்து இன்டர்வெல் வரைக்கும் சின்ன இடைவேளை கூட இல்லாம ரசிகர்களை ஆட வச்சிருக்காரு இயக்குனர் கார்த்தி சுப்பராஜ். ரஜினியோட நடை, உடை, பாவனை ஏன் ரஜினி உட்கார்ந்து இருக்குறதுல கூட செம ஸ்டைல். ஹாஸ்டல் வார்டனா வேலைக்கு சேர்றதுல இருந்து அங்க இருக்குற பிரச்சனைகளை தனக்கே உரிய ஸ்டைலோட ரஜினி சரி பண்றது வரைக்கும் படம் சும்மா ஜிவ்வுனு போகுது.

   இடையே இரண்டே இரண்டு காட்சிகள் மட்டும் சிம்ரனோட லவ் பண்றார். ஒரு சின்ன டூயட். ரெண்டுமே அசத்தல். படத்தோடு ரெண்டாவது பாதிக்கு முதல் பாதிலயே நிறைய ட்விஸ்ட் வச்சிருக்காரு டைரக்கடர். தான் பழிவாங்க வேண்டிய நபர் உத்தரபிரதேசத்தில மிகப்பெரிய அரசியல்வாதி, அவன சுத்தி எப்பவும் துப்பாக்கி ஏந்தி சுமார் 100 பேர் இருக்காங்க. இதை எல்லாம் மீறி ரஜினி எப்படி அவன பழிவாங்குறாரு, ஏன் பழிவாங்குறார்ங்றது தான் திரைக்கதை.

   படம் முழுக்க முழுக்க ரஜினிப்படம். சின்ன சின்ன விஷயங்கள்ல கூட ரஜினி ஸ்டைல் பண்ணி அசத்தியிருக்காரு. அதுவும் மரணமாஸ் பாட்டுல ரெண்டே ரெண்டு சீன் வந்து பின்னி பெடல் எடுத்துட்டு போய்டுறாரு. உல்லாலா பாட்டுலயும் ரஜினி டான்ஸ் ஆடும் போது தியேட்டரே ஆடுது. முனீஸ்காந்தோட சேர்ந்து ரஜினி பண்ற சின்ன சின்ன காமெடி படத்தோட ஒட்டிப்போகுறது ஹைலைட். படத்தின் முதல் பாதியிலேயே ரெண்டு மூனு சண்டை காட்சி. அத்தனைலையும் ரஜினி பின்னியிருக்காரு.

   ரஜினியோட மாஸ் தெரிஞ்சி பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகள்ல அசத்தியிருக்காரு, அதுவும் ரஜினி கராத்தே செய்யும் காட்சியில் தியேட்டரே அல்லோலப்படுது. சாதாரண வசனத்தை கூட ரஜினி பேசும் போது மாஸ் ஆக்கியிருக்காரு. அதுவும் பாபி சிம்ஹா கூட ரஜினி பேசுற வசனம் எல்லாம் தர லோக்கல். செகன்ட் ஆஃப் உத்தரபிரதேசம் போன பிறகு ரஜினி சீரியஸ் கேரக்டர் ஆகிடுராறு. ஒரே ஒரு சீன்ல ரொம்ப நாளைக்கு பிறகு ரஜினி சிகரெட் பிடிக்குறாரு. பட் அப்ப ரஜினி சொல்ற ஒரு வசனம் டச்சிங்.

   இப்டி படத்துல ரஜினிய பத்தி பேசனும்னா இன்னும் ரெண்டு நாளைக்கு பேசலாம். அவ்வளவு ரஜினி சீன் படத்துல இருக்கு. படத்துல ரஜினிய தவிர வேற யாருக்கும் வேலையே இல்லை. மிரட்டலா வர்ற விஜய் சேதுபதி கூட கடைசில ரஜினியால டம்மியாகிடுறாரு. கொடூரமான வில்லனா நவாசுதின் சித்திக்க டைரக்டர் காட்டியிருக்காரு. ஆனால் படத்தோட அது ஒட்டுன மாதிரி தெரியல. சசிகுமாரும் கூட ரெண்டு மூனு சீன் வர்றாரு ஆனா மனசுல நிக்குறாரு.

   சிம்ரன், த்ரிஷால படத்த கொஞ்சம் அழகாக்குறாங்க. மத்தபடி படத்துல அவங்களுக்கு கொஞ்சம் கூட வேலை இல்ல. படத்துல ரஜினிக்கு அப்புறம் மனசுல நிக்குற கேரக்டர்னா சேட்டன் கேரக்டர் தான். அவர் பேசுற ரெண்டு மூனு வசனம் காதுலயே விழுந்துகிட்டு இருக்கு.அப்புறம் முனிஸ்காந்த், வழக்கமான காமெடி ரோல் தான் ஆனா சிறப்பா செஞ்சிருக்காரு. படத்தோட இன்னொரு பிளஸ் இசை அமைப்பாளர் அனிருத். படத்துல ரஜினிக்கு பேக்ரவுன்ட் மியூசிக்ல மிரட்டியிருக்காரு.

   பாடல்களும் கேட்குற மாதிரி இருக்குறது ஆறுதல். ஒளிப்பதிவும் கூட அசத்தல் தான். டார்ஜிலிங்க அப்டியே தமிழ்நாட்டுல இருக்குற ஒரு ஏரியா மாதிரிகாட்ட முயற்சி பண்ணியிருக்காங்க. படத்தோட பிளஸ் திரைக்கதை தான். கடைசில வர்ற ட்விஸ்ட் எழுந்து நின்னு கைதட்ட வச்சிருக்கு. ஆனா பர்ஸ்ட் ஆஃப கம்பேர் பண்ணுனா செகன்ட் ஆப் கொஞ்சம் ஸ்லோ தான். ஆனால் கிளைமேக்ஸ் அதை மறக்க வச்சிடுது. மொத்தத்துல பேட்ட முழுக்க முழுக்க ஒரு ரஜினி படம்.

   டைரக்டர் கார்த்தி சுப்பராஜ் எவ்வளவு வெறித்தனமான ரஜினி ரசிகர்னு இந்த படத்தை பார்க்கும் போது தெரிஞ்சிக்க முடியுது. அப்படியே 20 வருசம் முன்னாடி இருந்த ரஜினிய நம்ம கண்ணு முன்னால கொண்டு வந்துருக்காரு. ரஜினிக்கு செம பில்டப் ஆனா உருத்தல் இல்ல. படத்துல விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சசிக்குமார், நவாசுதின், சிம்ரன், த்ரிஷானு ஒரு பெரிய பட்டாளமே இருந்தாலும் எல்லாரையும் ஊறுகாய் மாதிரி தான் பயன்படுத்தியிருக்காரு.

   ரஜினிக்குனு ஒரு திரைக்கதை எழுதி அதை அணு அணுவா ரஜினி வச்சி செதுக்கி ரஜினி ரசிகர்களை சந்தோசப்படுத்தியிருக்குறார கார்த்தி சுப்பராஜ். ரஜினி இன்னொரு படம் நடிக்கனும்னு யோசனையில் இருந்தால் கண்டிப்பா கார்த்தி சுப்பராஜ்க்கு வாய்ப்பு இருக்கு.    1990கள்ல வெளியான ஒரு ரஜினி படம் பார்த்த ஒரு எபெக்ட் பேட்ட படத்தை பார்க்கும் போது ஏற்படுது. கண்டிப்பா ரஜினி ரசிகர்கள் ரெண்டு