சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
ஆயிரம் கோடி ரூபாய் வசூல்! சாதனை படைக்கும் ரஜினி படம்!

ஷங்கர் இயக்கத்தில்,
ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்து, பிரமாண்டமான பொருட் செலவில்
உருவான படம் எந்திரன். இது உலக அளவில் பெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து, இந்த
படத்தின் 2ம் பாகமாக, 2.0 என்ற கதை எழுதப்பட்டு, ரஜினியை வைத்தே ஷங்கர் இயக்க
தொடங்கினார்.
லைக்கா புரொடக்ஷன்ஸ்
சார்பாக தயாரிக்கப்பட்ட 2.0 படம், அண்மையில் திரைக்கு வந்தது. ரஜினிகாந்த், எமி
ஜாக்சன், அக்ஷய் குமார் கன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், படத்தின்
காட்சியமைப்பு, திரைக்கதை பரபரப்பாக உள்ளதாக, பாராட்டுகள் குவிந்து
வருகின்றன.
படம் ரிலீசான ஒரு
மாதத்தில், உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இது
தமிழ்ப்படத்தின் வசூல் சாதனையில் முக்கியமானது என்றும் தகவல் தெரிவித்த நிலையில்,
தற்போது இந்த படம் உலகம் முழுவதும் வசூலித்த தொகை ரூ.713.50 கோடியாக உள்ளதென்று,
படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி
என பல்வேறு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்ட 2.0 படம், தமிழகத்தில் மட்டும் ரூ.100
கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்தியில் ரூ.190 கோடியும், சர்வதேச சந்தையில்
ரூ.160 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழத்தில் மட்டும் ரூ.100 கோடி
வசூலித்த முதல் படம் இது என்றும், படக்குழுவினர் பெருமையுடன்
குறிப்பிடுகின்றனர்.
2.0 வசூல் சாதனை
ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க, மறுபுறம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி
நடித்து வெளியான பேட்ட படமும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. இதுவரை தமிழகம்
உள்பட சர்வதேச அளவில் பேட்ட படத்தின் வசூல் ரூ.200 கோடியை நெருங்கியுள்ளது
குறிப்பிடத்தக்கது.