கல்யாணத்துக்கு முன்னாடியே தாம்பத்ய வாழ்க்கையை பற்றி பேசும் நிலா..! முகம் சுழிக்கும் குடும்ப பெண்கள்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலா சீரியலில் நிலா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தினம்தோறும் நான் கல்யாணம் பண்ணிக்க கூடாது. தாம்பத்ய வாழ்க்கை அனுபவிக்க கூடாதுன்னு நீலாம்பரி நினைக்கறான்னு டயலாக் பேசுவது ரசிகர்களை முகம் சுளிக்கும் விதமாக அமைந்துள்ளது.


பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதிலும் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் பிற்பகலில் ஒளிபரப்பாகும் நிலா சீரியல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இருக்கிறது.

ஆனால் சில தினங்களாக இந்த சீரியலில் இடம்பெறும் டயலாக்குகள் ரசிகர்களை முகம் சுளிக்கும் விதமாக அமைந்துள்ளது. அதாவது இந்த சீரியலை பொறுத்தவரையில் நிலா ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரி . அவளிடம் இருக்கும் சொத்துக்களை நீலாம்பரி தட்டிப் பறிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

அதுமட்டுமில்லாமல் நிலாவை திருமணம் செய்து கொள்வதைத் தடுக்கவும் நீலாம்பரி நினைக்கிறாள் . ஆகையால் நீலாம்பரிக்கும் நிலாவிற்கும் இடையே மிகப்பெரிய போர்க்களமே அந்த சீரியலில் நடைபெற்று வருகிறது. தன்னுடைய திருமணத்தை நீலாம்பரி தடுக்கிறாள் என்பதற்காக அனுதினமும் நிலா ஒரு டயலாக் கூறிய வண்ணம் இருக்கிறாள். அதுதான் நீலாம்பரி என்னை திருமணம் செய்து கொள்ள விடமாட்டாள் .

என்னை தாம்பத்திய வாழ்க்கையை அனுமதிக்கவும் அவள் விட மாட்டாள். ஆனால் அவளுடைய எண்ணத்தை நான் முறியடித்த தீருவேன் என்று இவ்விதமாக ஒரு டயலாக்கை தொடர்ந்து கூறிய வண்ணம் இருக்கிறாள் அந்த நிலா. இந்த டயலாக் ரசிகர்கள் மத்தியில் பெரும் முகம் சுளிப்பை ஏற்படுத்தி வருகிறது . எப்போதுதான் இந்த டயலாக்கிற்கு முடிவு கட்டுவீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.