சன் டிவி அனிதா சம்பத்துக்கு திடீர் கல்யாணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? மேரேஜ் போட்டோஸ் உள்ளே!

சன் டிவியின் பிரபல செய்தி வாசிப்பாளராக திகழ்ந்து வரும் அனிதா சம்பத் நேற்று முதல் அனிதா பிரபாகரன் ஆகியுள்ளார்.


ஒரே ஒரு புகைப்படம் மூலம் தமிழகத்தில் பிரபலமானவர்களில் முதன்மையானவர் அனிதா சம்பத். கச்சிதமாக புடவை கட்டி வகிடு எடுத்து தலைவாரி அளவாக லிப்ஸ்டிக் போட்டு சன் டிவியில் செய்தி வாசிக்க தயாரான போது அனிதாவை ஒரு புகைப்படம் எடுத்துள்ளார் ஒரு நபர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

அதன் பிறகு அனிதாவிற்கு என்று ஆர்மி, ரசிகர் மன்றம் போன்றவை கூட உருவாகின. அனிதாவை பின்தொடர ஏராளமானவர்கள் சமூக வலைதளங்களில் அவர் பக்கத்தில் திரண்டனர். இதன் பின்னர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வந்தார் அனிதா.

எப்படியாவது அனிதாவை கரெக்ட் செய்து செட்டில் ஆகி விட வேண்டும் என்று இளைஞர் பட்டாளம் ஒன்று அவருடைய சமூக வலைதள பக்கத்திலேயே தேவுடு காத்து வந்தனர். இந்த நிலையில் திடீரென அனிதா சம்பத் நேற்று தனது காதலர் பிரபாகரனை திருமணம் செய்து கொண்டார்.

இரு வீட்டார் சம்மதத்துடன் திருவள்ளூரில் தடல் புடலாக அனிதா திருமணம் முடிந்துள்ளது. பெரியோர் நிச்சயித்து நடைபெற்ற காதல் திருமணமாக இருந்தாலும் இதனை அனிதா மிகவும் ரகசியமாக வைத்திருந்தார். திருமணம் முடிந்து அவருடைய தோழிகள் புகைப்படத்தை வெளியிட்ட பிறகே பலருக்கும் அவர் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

மாப்பிள்ளையும் சென்னையை சேர்ந்தவர் தானாம். இருவரும் நண்பர்களாக இருந்து பின்னர் காதலர்களாக தற்போது கணவன் - மனைவியாகியுள்ளனர். நாமளும் இவர்களை வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்.