செய்தி தாள்களில் தற்கொலை பற்றிய செய்தியைப் படித்தவுடன் நாம் அதுபற்றி பெரிதாக ஆராய்வதில்லை. ஏனென்றால் மரணம் பற்றி படிக்க பெரும்பாலோருக்கு பயம் உள்ளது. பள்ளி மாணவர்கள் தொடங்கி மரணத்தைத் தொடும் வயதில் இருக்கும் பெரியவர் வரையிலும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
தற்கொலை என்பதும் ஒரு நோய்தான் – தற்கொலை செய்வதற்கான காரணங்கள் தெரியுமா?
எத்தனையோ ஆண்களின் கனவுக்கன்னியாக இருக்கும் நடிகைகளும், கோடிகளும் சம்பளம் பெறும் நட்சத்திரங்களும்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதற்கான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
* மனநோய் – ஆனால், தனக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது என்பதே பலருக்குத் தெரிவதில்லை.
* மனவருத்த நோய் – ஒரே விஷயத்தை அதிகம் சிந்தித்தல்
* மனசிதைவு நோய் – தன்னை மீறி ஏதேதோ நடக்கிறது என நினைத்தல்
* குடிநோய் – குடிக்கவில்லை
என்றால் இந்த உலகத்தில் வாழமுடியாது என்ற எண்ணம்
இவை தவிரவும் கீழ்க்கண்ட வகையில் பலரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
* போதை அடிமைகள் * பொருளியல் -வறுமை, சுயநலம் * அரசியல் * முதுமை * தனிமை* ஏமாற்றம் * அவமானம் * தீராத உடல் நோய் * இழப்பு * தோல்வி * சண்டை
இதுபோன்ற காரணங்களாலே பலரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.