கே ஜி எஃப் நடிகர் வீட்டு முன்பு தீக்குளித்த ரசிகர். எதற்காக எனத் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.

கன்னடத் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் யாஷ். இவருக்கு உயிரையும் கொடுக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்திய திரையுலகமே தற்போது இவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் அண்மையில் வெளியாகி மெகா ஹிட்டான கேஜிஎப் பாகம் 1 என்ற திரைப்படம் தான்.


பாகுபலியை மிஞ்சும் அளவுக்கு இப்படம் இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தனர் . பொதுவான சினிமா ரசிகர்களையும் இப்படம் திருப்திப்படுத்தி இருந்ததாக விமர்சனங்கள் வெளியாகின . மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் வசூலை வாரி குவித்தது. கோலார் தங்க சுரங்கம் பற்றிய திரைக்கதை சுவாரசியமாக அமைக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ஏங்க வைக்கும் அளவுக்கு உள்ளது. புகழின் உச்சிக்கே நடிகர் யாஷ்  சென்றுள்ள நிலையில் தனது 33 வது பிறந்தநாளை அவர் கொண்டாடவில்லை இதற்கு காரணம் கன்னட திரையுலகின் பழம்பெரும் நடிகரான அம்பரிஷ் மறைவு தான். கொண்டாட்டங்களை தவிர்த்து நடிகர் யாஷ், ரசிகர்களையும் சந்திக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில்தான் அவரது வீட்டு முன்பு துரதிஷ்டவசமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

ஆண்டுதோறும் தனது நடிகரின் பிறந்தநாளுக்கு அவரைச் சந்திக்கும் வழக்கத்தை கொண்ட தசரா அல்லி என்ற ஊரைச் சேர்ந்த ரவி ரகுராம் என்ற தீவிர ரசிகர் பெங்களூரில் உள்ள நடிகர் யாஷின் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு வெளியே காத்திருந்த ரவி நடிகருடன் செல்பி எடுக்க வேண்டும் என விரும்பியுள்ளார் ஆனால் ரசிகர் ரவியை சந்திக்க யாஷ் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.

அவரை வீட்டு காவலாளிகள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு 70% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ரவி உயிரிழந்தா.இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியும் ஆத்திரமடைந்த நடிகர் யாஷ், இது போன்ற ரசிகர்கள் தனக்கு தேவையில்லை என்று கூறியுள்ளார். இதுபோன்று ரசிகர்கள் செய்வதால் தனக்கு எதுவும் மகிழ்ச்சி கிடைக்கப்போவதில்லை என்று கூறியுள்ள அவர் ஒருவேளை நாமும் இதுபோல் செய்தால் நடிகர் யாஷ் தங்களைப் பார்க்க வந்துவிடுவார் என்று நினைக்க வேண்டாம் என காட்டமாக பதில் அளித்துள்ளார்.

ரசிகர் ரவியின் வெறித்தனமான பற்று கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவத் துறை தலைவர் ரமேஷ் தன்னை பார்க்க நடிகர் யாஷ் கண்டிப்பாக வருவார் என்று உயிருக்கு போராடிய வேலைகளும் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.