கள்ளக் காதலிக்காக கொலை! 12 வருடம் சிறை! விடுதலை ஆன பிறகு படித்து டாக்டர் பட்டம்! அசர வைத்த இளைஞன்!

பெங்களூருவில் சுமார் 14 ஆண்டுகளாக சிறையில் இருந்த ஒருவர் தற்போது மருத்துவ படிப்பு படித்து முடித்து பட்டம் பெற்றுள்ள பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


சுபாஷ் துகாராம் பாட்டீல்.  என்பவர் பெங்களூரை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு பயின்று வந்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது பத்மாவதி என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாள் இடையில் இவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது. ஆனால் பத்மாவதிக்கு ஏற்கனவே அசோக் குத்தேதார் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இடையே உள்ள பழக்கத்தைப் பற்றி அறிந்துகொண்ட பத்மாவின் கணவர் சுபாஷை அழைத்து கண்டித்துள்ளார்.

இதனால் கடுப்பான சுபாஷ் அசோக்கை கடந்த 2002ஆம் ஆண்டு கொலை செய்திருக்கிறார். இந்த கொலை நிரூபிக்கப்பட்டதால் சுபாஷுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் சுபாஷ் தன்னுடைய மருத்துவ படிப்பை கைவிட்டு விட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.

சுபாஷ் சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த பொழுதே முதுகலை இதழியல்  படிப்பை பயின்றுள்ளார். பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு தண்டனை முடிவு பெற்று சிறையை விட்டு வெளியே வந்திருக்கிறார். வெளியே வந்த அவர் மீண்டும் தன்னுடைய மருத்துவ படிப்பை தொடர முடிவு செய்திருக்கிறார்.

தன்னுடைய படிப்பை மீண்டும் தொடர்வதற்கான அனுமதியைப் பெறுவதற்காக ராஜிவ் காந்தி சுகாதார மற்றும் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து பேசியுள்ளார். சுபாஷின் ஆர்வத்தை பார்த்த அவர் படிப்பை மீண்டும் தொடர்வதற்கு அனுமதி அளித்திருக்கிறார். 

இதனை அடுத்து கல்புர்கியில் உள்ள கர்நாடக கல்வி குழுமத்தின் மகாதேவப்பா ரேவூரா மருத்துவக் கல்லூரியில் சுபாஷ் சேர்ந்து தன்னுடைய படிப்பை தொடர ஆரம்பித்திருக்கிறார். இதனையடுத்து அவர் தன்னை விட 18 வயது குறைவாக இருந்த மாணவர்களுடன் ஒன்றாக இணைந்து படித்திருக்கிறார்.

பின்னர் எந்த ஒரு அரியரும் இல்லாமல் அவர் தவறவிட்ட இரண்டு ஆண்டு படிப்பை மிகச் சிறப்பாக படித்து முடித்து விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சுபாஷின் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது . பல ஆண்டு இடைவெளிக்குப் பின்பு வெற்றிகரமாக தன்னுடைய மருத்துவ படிப்பை முடித்து உள்ள சுபாஷ் பேராசிரியர்கள் மற்றும் அவருடன் பயிலும் மாணவர்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர்.