என் பொண்டாட்டியையும் எடுத்துக்கிட்டான்..! இப்போ 5 கோடி ரூபாய் சொத்தும்..! போலீஸ் எஸ்ஐ மீது அப்பாவி கணவன் பகீர் புகார்!

காவல் ஆய்வாளர் ஒருவர் தன் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருப்பதாக வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் புகாரளித்துள்ள சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் உள்ள கே.கே.நகர் பகுதியில் ஜனார்த்தனன் - நர்மதா தம்பதியினர் வசித்து வந்தனர். ஜனார்த்தனன் வேலை நிமித்தமாக சவுதி அரேபியாவில் வசித்து வருகிறார். இவர் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியராவார். இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து கிட்டத்தட்ட 5 கோடிக்கும் மேலான சுட்டுக்கொலை சேர்த்துள்ளார். இந்நிலையில் சவுதி அரேபியாவிலிருந்து சென்ற ஆண்டு மே மாதத்தில் ஜனார்த்தனன் இந்தியா திரும்பினார். சென்னை வந்து அடைந்ததிலிருந்து அவருக்கு பல்வேறு அதிர்ச்சிகள் காத்திருந்தன.

அதாவது ஜனார்தனன் மனைவியான நிர்மலாவுக்கு திருநின்றவூர் பகுதியின் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர். 

இதனிடையே தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேர்த்து வைத்த சொத்துக்களை நர்மதா ராஜேஷுடன் இணைந்து கொண்டு அபகரித்துள்ளார். மேலும் இதனை உறுதிப்படுத்துவதற்காக ராயல் நகர் பகுதியில் அமைந்துள்ள பூங்காவிற்கு நர்மதாவை பின்தொடர்ந்து ஜனார்த்தனன் சென்ற ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். நர்மதா ராஜேஷை சந்தித்தபோது, ஜனார்த்தனன் அதனை படம் பிடித்துவிட்டார். 

இதனை பார்த்த ராஜேஷ் ஜனார்த்தனை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் கொலை செய்து விடுவதாக ஜனார்த்தனனை ராஜேஷ் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன ஜனார்த்தனன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திருநின்றவூர் உதவி காவல் ஆய்வாளர் ராஜேஷ் மீது புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவமானது நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.