நாங்கள் எதற்கும் தயார்! துணைவேந்தரை ஆபாச வார்த்தைகளுடன் வரவேற்ற மாணவிகள்! ஏன் தெரியுமா?

மேற்குவங்காளத்தில் மாணவர்கள் ஆபாச வார்த்தைகளை உடலில் பெயிண்ட் அடித்து கொண்டுநடனம் ஆடியதால் துணைவேந்தர் ராஜினாமா செய்துள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேற்குவங்காளத்தில் ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் வங்காள கலாச்சார விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல இளைஞர்கள் நடனங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அவர்களுள் சிலர் தங்களுடைய உடல்களில் ஆபாசமான மொழிகளை வரைந்து வைத்திருந்தார்கள். இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சபியாசாச்சி ராய் சௌத்ரி செயல்பட்டு வந்தார்.

இது பல்கலைக் கழகத்தில் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வானது அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அனைத்து பொறுப்புகளையும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஏற்றுள்ளார்.

தார்மீக அடிப்படையில் தன்னுடைய பொறுப்பை அவர் ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் பல்கலைக்கழகத்தின் அதிபரான ஜெகதீஷ் சங்கர் என்பவருக்கும், மேற்கு வங்காள கல்வி அமைச்சரான பார்த்தா சாட்டர்ஜிக்கும் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் ஹோலி கொண்டாட்டத்தின்போது கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய பாடல்களை மிகவும் அவதூறாக சித்தரித்து தங்களுடைய உடல்களில் வரைந்துள்ளனர். இதுகுறித்து கல்வி அமைச்சர் சாட்டர்ஜி கூறுகையில், "இது மிகவும் அநாகரிக செயல் ஆகும். துணைவேந்தரின் கடிதம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்த பின்னர் அதுகுறித்து நடவடிக்கைகளை மேற்கொள்வேன். நிச்சயமாக திரும்பிக் கொள்ளுமாறு வற்புறுத்துவேன்" என்று கூறியுள்ளார்.இந்த சம்பவமானது மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.