கைகளில் இருந்து நழுவிய பேட்..! துடிதுடித்து உயிரிழந்த சிறுவன்! கிரிக்கெட் போட்டியில் பயங்கரம்!

கைகளிலிருந்து நழுவிய கிரிக்கெட் மட்டை இளைஞர் பலியான சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் மவ்லிகேரா என்ற இடம் அமைந்துள்ளது. இங்குள்ள சுனகர உயர்நிலைப்பள்ளியில் சிறுவர்கள் மதிய நேரத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது நவநீத் என்ற சிறுவன் கை கழுவுவதற்காக சென்றுள்ளார். அப்போது விளையாடி கொண்டிருந்த சிறுவர்களின் கைகளில் இருந்த கிரிக்கெட் மட்டை நழுவி பறந்துள்ளது.

மட்டையானது கை கழுவி கொண்டிருந்த நவநீதின் தலையை பதம் பார்த்தது. பலத்த காயமடைந்த மாணவனை ஆசிரியர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவர் இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது அந்த பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.