பகல் உணவை நிறுத்தினால் தொப்பை குறையும் என்பது மருத்துவ மூட நம்பிக்கையா... நிஜமா?

இன்று உடல் உழைப்பு குறைந்துவிட்ட காரணத்தால் 25வயதில் ஆண்கள் தொப்பையுடனும் 30 வயதில் பெண்கள் தொப்பையுடனும் காணப்படுகிறார்கள். என்னதான் லூசான ஆடை அணிந்துகொண்டாலும், தொப்பை வளர்ந்துகொண்டே போவதை தடுக்க முடியாமல் சிரமப்படுவார்கள்.


இப்படிப்பட்ட தொப்பையர்கள் செய்யும் முதல் வேலை, காலை உணவை நிறுத்தினால் தொப்பை குறைந்துவிடும் என்ற நம்பிக்கைதான்.இது எந்த வகையிலும் உண்மை இல்லை. எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும். தொடர்ந்து இஞ்சி டீ குடித்துவர வேண்டும்.

இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

வெறுமனே உடல் குறைக்க உணவு கட்டுப்பாடு மட்டும் போதாது. உடற்பயிற்சியும் அவசியம். காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும். டிரை பண்ணி பாருங்க, தொப்பை இல்லா பெருவாழ்வு வாழலாம்.