ராகுலுக்காக 20 மாணவிகள் பக்கா செட்டப்! பற்றி எரியும் ஸ்டெல்லா மேரீஸ் விவகாரம்! தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை!

இதெல்லாமே நாடகமா ராகுல்..? அதிர்ச்சியில் சென்னை காலேஜ் பெண்கள்... ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு அரசு எச்சரிக்கை


ஹாய் ராகுல் என்று அழைக்கச்சொன்னதும், ஜீன்ஸ் டீசர்ட் போட்டுக்கொண்டு கெத்து காட்டியதும் சென்னை கல்லூரிப் பெண்கள் ராகுல் காந்தி மீது பயங்கர கிரேஸாகிப் போனார்கள். இப்படியொரு தலைவனை பார்த்ததே இல்லை என்று மாய்ந்து மாய்ந்து ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் பொங்கிக்கொண்டு இருந்தார்கள்.

ஆனால், ராகுல் நடத்திய கேள்வி பதில் பக்கா நாடகம் என்பது இப்போது தெரியவந்துள்ளது. இதுபோன்று வட மாநிலங்களில் ஏகப்பட்ட கல்லூரிகளுக்குப் போய் வந்திருக்கிறார் ராகுல். எப்படிப்பட்ட கேள்விகள் கேட்கவேண்டும் என்று முன்கூட்டியே மாணவிகளிடம் எழுதிக் கொடுக்கப்படும். அந்தக் கேள்விகளை மட்டுமே மாணவிகள் கேட்க முடியும்.

பக்காவாக பதில் தயார் செய்துகொண்டு வருவதால் மாணவிகள் கேட்கும் கேள்விகளுக்குப் பிரமாதமாக பதில் சொல்லிவிடுவார் ராகுல். திடீரென யாரேனும் கேள்வி கேட்பதற்கு அனுமதி கிடையாது. ஏற்கெனவே கொடுத்த கேள்வி தவிர, வேறு கேள்வி கேட்டால், இது குறித்து பின்னர் பதில் தெரிவிக்கிறேன் என்று நழுவி விடுவாராம் ராகுல்.

இந்த விவகாரம் கல்லூரியில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தெரியும். கேள்வி கேட்கத் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்குக் கூட, இந்தக் கேள்விதான் கேட்கப்போகிறோம் என்று ராகுலுக்கு சொல்லப்பட்டுவிட்டது என்ற தகவல் தெரியாது. அதனால்தான் அவர்கள்  ராகுலை தர்மசங்டத்துக்கு ஆளாக்குவதுபோல் கேள்வி கேட்பார்கள். ஆனால், ராகுல் அந்தக் கேள்விகளை சாதாரணமாக எதிர்கொண்டு பதில் சொல்லி நல்ல பெயர் வாங்கிக்கொள்வார்.

இந்த விவகாரம் எல்லாம் இப்போதுதான் தெரியவர, கல்லூரி மாணவிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இப்படி செட்டப் செய்துதான் எங்கள் மனதை கொள்ளையடித்தாரா என்று டென்ஷன் ஆகிறார்கள்.

அதுமட்டுமின்றி, ராகுலுக்கு அனுமதி கொடுத்தது எப்படி, கல்லூரிக்குள் எப்படி அரசியல் நிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டீர்கள் என்று ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு அரசு தரப்பில் கடுமையாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாம். 

ஏற்கெனவே லயோலா கல்லூரி நிர்வாகம் பா.ஜ.க. அரசுக்கு எதிராக கச்சை கட்டியது. அதேபோன்று இதுவும் கிறிஸ்தவ நிறுவனம் என்பதால், இதுவும் பா.ஜ.க.வுக்கு ஏதிராக செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.