நீட், இட ஒதுக்கீடு விவகாரங்களில் ஸ்டாலின் இரட்டை வேடம் அம்பலம்.. என்னமா நடிக்குது தி.மு.க.?

நீட் தேர்வு கொண்டுவருவதற்கு காரணமாக அமைந்ததே காங்கிரஸ் கட்சிதான். அப்போது அதன் கூட்டாளியாக இருந்தது தி.மு.க. ஆனால், அதனை மறந்துவிட்டு நீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகிறது.


அதேபோன்று நீட் மட்டுமல்ல, மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றப் படாமல் இருந்ததும் தி.மு.க.- காங்கிரசின் கூட்டணி ஆட்சிக்காலத்தில்தான்,

இதுமட்டுமின்றி நீட் தேர்வு விவகாரம் நீதிமன்றத்தில் வந்த நேரத்தில், அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தியது காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்.

இப்படி செய்வதை எல்லாம் செய்துவிட்டு இப்போது 7.5 சதவிகித ஒதுக்கீடு குறித்தும் 50 சதவிகித ஒதுக்கீடு குறித்தும் போராட்டங்கள் நடத்தியும்,வருகின்றனர். ஆனால், உண்மை மக்களுக்குத் தெரியும்.

மக்களுக்கும் மாணவர்களுக்கும் துரோகங்கள் செய்துவிட்டு இந்த உரிமைகளை சட்டரீதியாக மீட்க முயலும் அதிமுக அரசை குறைகூறுவதுதான் திமுகவின் இரண்டாந்தர அரசியல்!