சட்டமன்றத்தில் இன்று ஸ்டாலின் கோரிக்கை நிராகரிப்பு.! தெறிக்கவிட்ட அமைசர் செங்கோட்டையன்.

இன்று தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு க ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.


புதிய கல்விக் கொள்கை 2020 இரு மொழிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமாக அமைந்துள்ளது என்றும் 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, நம் மாநிலத்தில் சிறப்பான முறையில் இருக்கும் கல்வி முறைக்கு எதிராக உள்ளது எனவே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் , சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி புதிய கல்விக் கொள்கையை முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அடுத்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “புதிய கல்விக் கொள்கை அறிக்கையின் மீதான அரசின் கருத்துக்கள், கடந்த ஆண்டே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் இருக்கும் என திட்டவட்டமாக சொல்லப்பட்டது. புதிய கல்விக்கொள்கையை முழுமையாக பரிசீலனை செய்ய பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது

அந்தக் குழுவின் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். 3,5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது. மத்திய அரசு எவ்வளவு வலியுறுத்தினாலும் சில முடிவுகளில் பின்வாங்க மாட்டோம், என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.